Ponnoviyam - Ilaiyaraaja

Ponnoviyam

Ilaiyaraaja

00:00

04:09

Similar recommendations

Lyric

பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

கொண்டேனம்மா பேரின்பம்

அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே

பார்வையில் ஆயிரம் பாடுங்களே

பொன்னோவியம்

காதல் காதல் காதல் தினம் தேனாகும்

வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்

பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம் நூறாகும் நூறாகும்

பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்

போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்

கைகள் இணையும், கண்கள் மயங்கும் சொர்க்கம் திறக்கும்

மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்

மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்

கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி நானுண்டு நானுண்டு

பச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்

ஓ இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்

காயும் கனியும் மொட்டும் மலரும் சொர்க்கம் தெரியும்

பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்

கொண்டேனம்மா பேரிம்பம்

அன்பில் ஒன்று சேருங்களே இன்பம் என்றும் காணுங்களே

பார்வையில் ஆயிரம் பாடுங்களே

- It's already the end -