Paadavaa Un Paadalai - S. Janaki

Paadavaa Un Paadalai

S. Janaki

00:00

04:30

Similar recommendations

Lyric

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

பாடவா உன் பாடலை

தேங்கும் கண்ணீரில்

உந்தன் பிம்பம்

பூவின் நெஞ்சில் பூகம்பம்

தேங்கும் கண்ணீரில்

உந்தன் பிம்பம்

பூவின் நெஞ்சில் பூகம்பம்

சுடரோடு எரியாது

திரி போன தேகம்

உயிர் போன பின்னாலும்

உடல் இங்கு வாழும்

கண்ணீரில் சுகம்

காணாதோ மனம்

நீ தந்த மாங்கல்யம்

என் ஜென்ம சாபல்யம்

பாடவா உன் பாடலை

என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

பாடவா உன் பாடலை

கண்ணா என் நெஞ்சில்

காதல் காயம்

ஆறுதல் சொல்லும் ஆகாயம்

கண்ணா என் நெஞ்சில்

காதல் காயம்

ஆறுதல் சொல்லும் ஆகாயம்

புயலோடு போராடும்

பூவாகும் வாழ்க்கை

இருந்தாலும் என் நெஞ்சில்

ஏன் இந்த வேட்க்கை

உன் பாதை எங்கே

என் பாதம் அங்கே

வளராமல் தேயாமல்

வாழ்கின்ற நிலவிங்கே

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை

- It's already the end -